உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமான ரோட்டை சீரமைத்த எஸ்.டி.பி.ஐ., கட்சியினர்

சேதமான ரோட்டை சீரமைத்த எஸ்.டி.பி.ஐ., கட்சியினர்

கூடலுார்: கூடலுார் மெயின் பஜாரில் சேதமடைந்த ரோட்டை எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் தற்காலிகமாக சீரமைத்தனர். கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பழைய பஸ்ஸ்டாண்ட், மெயின் பஜார், பள்ளிவாசல் வரையுள்ள ரோடு பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் கூடுதலாக சேதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ., கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்கட்டடக் கழிவுகளை டிராக்டர் மூலம் கொண்டு வந்து குண்டும் குழியுமான பகுதிகளில் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் மெயின் பஜாரில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் மழை குறைந்தவுடன் போக்குவரத்து அதிகமாக உள்ள மெயின் பஜாரில் உடனடியாக ரோடு அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !