உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருட்டு மணல் தாலுகா அலுவலகத்தில் குவிப்பு

திருட்டு மணல் தாலுகா அலுவலகத்தில் குவிப்பு

தேனி: தேனி அருகே கொடுவிலார்பட்டி அருகே ஆற்றில் இருந்து திருடி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 யூனிட் மணலை தாலுகா அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் கொண்டு வந்தனர். மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரத்தில் ஆற்று மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் வருவாய்த்துறை அதிகாரிகள் பாண்டியராஜபுரத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது தனியார் தென்னந்தோப்பில் மணல் குவியல் இருந்தது. வருவாய்த்துறையினர் நீர்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பாக எந்த துறையினரும் போலீசில் புகார் அளிக்க வில்லை. இந்நிலையில் நேற்று தோப்பில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை லாரிகள் மூலம் தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுமார் 16 யூனிட் மணல் இருந்தது. கனிமவளத்துறை, நீர்வளத்துறையுடன் இணைந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை