உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலைபேசி பார்ப்பதை கண்டித்ததால் மாணவி துாக்கிட்டு தற்கொலை

அலைபேசி பார்ப்பதை கண்டித்ததால் மாணவி துாக்கிட்டு தற்கொலை

கம்பம் : அலைபேசியை பார்க்காமல் படிப்பில் கவனம் செலுத்துமாறு தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தில் வசிப்பவர் சங்கிலி முத்து 54, கட்டட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி பலசரக்கு கடை நடத்துகிறார். இவர்களுக்கு தனலட்சுமி, மதுமிதா என இரண்டு மகள்கள் இருந்தனர். தனலட்சுமிக்கு திருமணம் ஆகி விட்டது. மதுமிதா ராயப்பன்பட்டி பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மதுமிதா வீட்டில் அலைபேசி பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த தாயார் அவரை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றார். காலையில் மகள் அறையில் இருந்து எழுந்து வராததை அறிந்த பெற்றோர் சென்று பார்த்த போது அங்கு சேலையால் தூக்கிட்டு தொங்குவதை அறிந்து மகளை இறக்கியுள்ளனர். கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை