வட்டார போட்டிகளில் மாணவர்கள் அசத்தல்
தேனி: பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் வட்டார அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. மை பாரத் துணை இயக்குனர் பிரவீன் குமார் தலைமை வகித்தார். வடுகபட்டி கவுன்சிலர் வசந்த பாலாஜி துவக்கி வைத்தார். ஓட்டப்பந்தயம், சிலம்பம், வாலிபால் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன், முன்னாள் மத்திய உளவுத்துறை அதிகாரி செல்வம் பரிசு வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன், நிர்வாகிகள் வைரமுத்து, திருநாவுக்கரசு செய்தனர்.