உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதல்வர் கோப்பை போட்டி மாணவர்கள் உற்சாகம்

முதல்வர் கோப்பை போட்டி மாணவர்கள் உற்சாகம்

தேனி: முதல்வர் கோப்பை போட்டி விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி மாணவர்கள், மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆக.,26ல் மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆயுதப்படை மைதானத்தில் துவங்கியது. நேற்று கல்லுாரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள், கிரிக்கெட், கபடி, நீச்சல் போட்டிகள் நடந்தன. கல்லுாரி மாணவிகள் பிரிவில் ஹாக்கி, டென்னிஸ், நீச்சல் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை