உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்டல கூடைப்பந்து போட்டியில் மதுரை, தேனி மாணவர்கள் தேர்வு 

மண்டல கூடைப்பந்து போட்டியில் மதுரை, தேனி மாணவர்கள் தேர்வு 

தேனி: மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து அணிக்கு தேனி, மதுரை மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகினர். தேசிய அளவில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகள் மாணவர்கள், மாணவிகள் பிரிவில் 14,17,19 வயதிற்குட்பட்டு நடத்தப்படுகிறது. மதுரை மண்டல அளவிலான மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 14வயது பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் தர்ஷன், பத்மேஸ்வரன், திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பள்ளி மாணவர் வீமன், மதுரை அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கார்முகிலன், திர்ஷன், செனாய்நகர் கார்ப்ன் இளங்கே மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்சாமரன் தேர்வாகினர். 17 வயது பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சுஜித், பிரவீன், திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி மாணவர்கள் விஷ்வா, தர்ஷன், மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் திலீப் ஆகாஷ், அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி மாணவர் இளஞ்செழியன் தேர்வாகினர். 19வயது பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் நிதின், ஹரிஹரன், திருண் வெங்கடேஷ், மதுரை அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி அரவிந்த் பிரசாத், யோகேஷ், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மேல்நிலைப்பள்ளி அருண்பாண்டி தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !