உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  எஸ்.ஐ.ஆர். பணியினை நிறைவு செய்த பி.எல்.ஓ.,விற்கு சப் கலெக்டர் பாராட்டு

 எஸ்.ஐ.ஆர். பணியினை நிறைவு செய்த பி.எல்.ஓ.,விற்கு சப் கலெக்டர் பாராட்டு

மூணாறு: தேவிகுளம் சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர். பணிகளை முதன்முதலாக நூறு சதவீதம் பூர்த்தி செய்த பி.எல்.ஓ., சுஜிதாவை சப் கலெக்டர் ஆர்யா பாராட்டினார். கேரளா வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் உள்ளதாக கூறி பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேசமயம் கேரளா, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 177 ம் எண் வாக்குசாவடியில் எஸ்.ஐ.ஆர். பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. அப்பணிகளை பைசன்வாலியை சேர்ந்த பி.எல்.ஓ., சுஜிதா முதன்முதலாக நூறு சதவீதம் பூர்த்தி செய்தார். தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா, சுஜிதாவின் வீட்டிற்கு சென்று பாராட்டினார். அவருக்கு பேனா பரிசாக வழங்கினார். அதேபோல் இத்தொகுதிக்கு உட்பட்ட மறையூர் ஊராட்சியில் 5ம் எண் பி.எல்.ஓ., லிஜிமோள், தேவிகுளம் ஊராட்சியில் 44ம் எண் பி.எல்.ஓ., ஜான்சன் ஆகியோரும் பணிகளை நூறு சதவீதம் பூர்த்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி