உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் அவதி

குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் அவதி

கூடலுார்; கூடலுார் நகராட்சி 21 வார்டுகளில் இருந்து சேகரமாகும் குப்பை பெத்துக்குளம் பகுதியில் கொட்டப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள இங்கு குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாலும், தீ வைப்பதால் வெளியேறும் புகையால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் மாற்றியமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. கடந்த 2 நாட்களாக மலை போல் குவிந்திருக்கும் குப்பையில் தீ வைத்து விடுவதால் வெளியேறும் புகை குடியிருப்பு பகுதியில் நுழைவதால் மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைக் கிடங்கை மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை