உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதையில் கிணற்றில் குதித்து தற்கொலை

போதையில் கிணற்றில் குதித்து தற்கொலை

போடி: போடி மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 26. இவரது மனைவி ஹேமா ஸ்ரீ 19. ஒரு குழந்தை உள்ளது. நிரந்தர வேலை இல்லாத நிலையில் தங்கப்பாண்டிக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சிலமலையில் வசிக்கும் மாமானர் பிரபு வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு மது போதையில் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். அதன் பின் தற்கொலை செய்து கொள்ள போவதாக பயமுறுத்திய தங்கப்பாண்டி வீட்டின் பின்புறம் உள்ள 100 அடி கிணற்றில் குதித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மீட்க முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று காலை தங்கப்பாண்டி இறந்த நிலையில் மீட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை