உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பழக்கத்தால் தற்கொலை

மது பழக்கத்தால் தற்கொலை

கம்பம் : கம்பம் ராமையா கவுடர் தெருவில் வசித்தவர் முத்துப்பாண்டி 36, இவரது மனவி மஞ்சுளா 27, இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் மைக்ரோ பைனான்ஸ், கிராம விடியல், மகளிர் குழுக்களிடம் தலா ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். அந்த கடனை முறையாக திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் முத்துப்பாண்டி மன உளைச்சலில் இருந்துள்ளார். தினமும் மதுஅருத்தி வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மஞ்சுளா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு சென்றவுடன் மன உளைச்சலில் இருந்த முத்துப் பாண்டி வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ