கடன் தொல்லையால் தற்கொலை
போடி: போடி மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோட்டில் வசிப்பவர் தயாளன் 50. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதிக அளவில் கடன் வாங்கியதால் கடனை செலுத்த முடியாமல் மது குடித்து வந்துள்ளார். மனம் உடைந்த தயாளன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மஞ்சுளா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.