மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
12-Mar-2025
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே காட்ரோடு கோட்டார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா 60. இவர் இதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி சேகர் வீட்டில் வசித்து வந்தார். ராஜாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். ராஜாவின் மாமியார் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ராஜ் மனைவி முத்தம்மாள் 75. மருமகன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்தார். அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் முத்தம்மாள் தனது மருமகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரணை செய்து வருகிறார்.
12-Mar-2025