மேலும் செய்திகள்
1.38 டன் ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு 'காப்பு'
11-Dec-2024
கம்பம் : - கம்பம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக கேரள அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. அதிகாரிகளின் முழு ஆசியுடன் தான் இந்த கடத்தல் நடைபெறுகிறது. இருந்த போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி பதிவு பதிவு செய்வது வழக்கம்.நேற்று காலை தேனி உதவி ஆணையர் ( கலால் ) ரவிச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கட்டப்பனை வட்ட வழங்கல் அலுவலர் மோகனன், குமுளி இன்ஸ்பெக்டர் சுஜித், வட்ட வழங்கல் அலுவலர் வினோதினி, இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இரு மாநில அதிகாரிகளும் இணைந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தவது என்று முடிவு செய்யப்பட்டது.
11-Dec-2024