மேலும் செய்திகள்
சாகச பயண கார் பறிமுதல்
15-Jun-2025
மூணாறு: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை அருகே தமிழக சுற்றுலா பயணிகள் வேனில் சாகச பயணம் செய்த சம்பவம் குறித்து போலீசார், மோட்டார் வாகனதுறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு வாகன விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இச்செயல்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆபத்தை உணராமலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களில் சாகச பயணம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.அது போன்று பயணம் செய்வோரை கண்காணிப்பதற்கு மோட்டார் வாகன துறை சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்ட போதும், அக்குழு செயல்படாததால் வாகன விதிமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை அருகே தமிழக சுற்றுலா பயணிகள் வேனில் சாகச பயணம் செய்தனர். சில பயணிகள் வேனில் மேல் நின்றவாறும், படிக்கட்டில் தொங்கியவாறும், அதனை ரசித்தவாறு ரோட்டில் வேனை சுற்றி ஓடியவாறும் ஆபத்தான செயலில் ஈடுபட்டனர். அதன் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானதுடன் போலீசார், மோட்டார் வாகனதுறை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு சென்றது. அதனை குறித்து விசாரிக்கின்றனர்.
15-Jun-2025