உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆசிரியர் தகுதி தேர்வு மைய கண்காணிப்பு ஆலோசனை

 ஆசிரியர் தகுதி தேர்வு மைய கண்காணிப்பு ஆலோசனை

தேனி: இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (நவ.,15), நாளை மறுநாள் (நவ.,16) பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 23 மையங்களில் 10,086 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களை நேற்று இடைநிலைக்கல்வி இணை இயக்குநர் அய்யணன் பார்வையிட்டார். தொடர்ந்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஈடுபட உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்கு சி.இ.ஓ., நாகேந்திரன் முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் சுருளிவேல் (இடைநிலை), சண்முகவேல் (தனியார்பள்ளிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ