உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தேனியில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தேனி : தேனி பங்களா மேட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டணி மாநில செயலாளர் முருகன் துவக்கிவைத்தார். இதில் தொடக்ககல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை ரத்து செய்திட வேண்டும், டிட்டோ ஜாக்குடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினர்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணமுத்து, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராம்குமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜவேல், ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமகுரு, தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சூசைமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி கூடுதல் தலைவர் சின்னச்சாமி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை