உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சகதியில் தவிக்கும் டெலிபோன் நகர்

சகதியில் தவிக்கும் டெலிபோன் நகர்

தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி டெலிபோன் நகரில் சில மாதங்களுக்கு முன் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. இதில் வீடுகளை விட உயரம் அதிகமாக சாக்கடை அமைத்தால் பணி செய்வதற்கு அப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணியை பாதியில் ஊராட்சி நிர்வாகம், வளர்ச்சித்துறை அதிகாரிகள் நிறுத்தினர். இதனால் அந்த பகுதி தற்போது ரோடு வசதி இன்றி சகதி காடாக காட்சியளிக்கிறது. முதியோர், டூவீலர்களில் செல்வோர் பலர் தடுமாறி விழுகின்றனர். ரோடு வசதி ஏற்படுத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை