மேலும் செய்திகள்
காளியம்மன் கோயில் பொங்கல் விழா
31-Mar-2025
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மதுர காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. 4 நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு அங்கப் பிரதட்சனை செய்யப்பட்டது.2ம் நாளில் பெண்கள் தீர்த்த குடம் ஊர்வலம் சென்று புண்ணிய வாசம் செய்து, அம்மனுக்கு சிறுதானியங்களில் காய்ச்சிய கூழ் படையல் செய்தனர். இரவில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அடுத்தடுத்த நாளில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாள் நிகழ்ச்சியாக சிறப்பு அலங்கார அம்மன் பூஞ்சோலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
31-Mar-2025