மேலும் செய்திகள்
திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
14-Apr-2025
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் கோயில் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர்.கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு, மா விளக்கு ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் சுமந்து ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழா ஏற்பாடுகளை தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் ஜெகநாதன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
14-Apr-2025