உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை சீசனுக்காக பைபாசில் உருவாகும் தற்காலிக கடைகள்

சபரிமலை சீசனுக்காக பைபாசில் உருவாகும் தற்காலிக கடைகள்

தேனி: சபரிமலை சீசனுக்காக திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக கடைகள் உருவாகி வருகின்றன. இந்த கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் கிடைப்பதை உணவுப் பாதுகாப்புத்துறையினர் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சபரிமலை மண்டல பூஜை விரைவில் துவங்க உள்ளது. சபரிமலைக்கு ரோடு மார்க்கத்தில் அதிக அளவிலான பக்தர்கள் சென்று வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான பக்தர்கள், கர்நாடகா, பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தேனி வழியாக செல்கின்றனர். மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நவ., முதல் ஜன., வரை அதிக அளவில் பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்காக இந்த ரோட்டில் பல இடங்களில் ஓட்டல்கள், டீக்கடைகள், பழம், ஜூஸ்கள் விற்பனை செய்ய கடைகள் செயல்படும். சில இடங்களில் அசைவ கடைகளை சீசனுக்காக சைவ கடைகளாக மாற்றும் வகையில் பெயர் பலகை தயார் செய் கின்றனர். பக்தர்கள் இந்த கடைகளில் உணவு உண்டு செல்கின்றனர். இந்த கடைகளில் தரமான, சுகாதாரமான உணவுகள் பக்தர்களுக்கு கிடைப்பதை உணவுப்பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் தற்காலிக கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்வது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !