மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
24-Jun-2025
தேனி: கம்பம் அருகே விற்பனைக்காக டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 10 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் கம்பத்தில் இருந்து ஊத்துக்காடு செல்லும் ரோட்டில் தனியார் திராட்சை தோட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீலரில் வந்த கம்பம் மந்தையம்மன் கோவில் தெரு சேகர் 41, மேலக்கூடலுார் சரவணன் 32 ஆகியோரை விசாரித்தனர். அவர்கள் விற்பனைக்காக ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றது தெரிந்தது. அவர்களை கைது செய்து, டூவீலர், கஞ்சாவை கைப்பற்றினர். வழக்கில் தொடர்புடைய கம்பம் சரத்குமார், சுருளிபட்டி சந்திரசேகர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாதகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
24-Jun-2025