உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்ணெண்ணெய் அளவு குறைப்பு

மண்ணெண்ணெய் அளவு குறைப்பு

ஆண்டிபட்டி : ஏத்தகோயில் ரேஷன் கடையில் 650 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் இதுவரை வழங்கப்பட்டது. இம்மாதம் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் இரண்டு லிட்டர் வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் ஏற்க மறுத்து ரேஷன் கடையில் பிரச்னை செய்தனர். பேச்சுவார்த்தைக்கு பின், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் ரேஷன் கார்டுக்கு தலா இரண்டு லிட்டர் வீதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி