உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாய்க்குள் கழிவுகள் கொட்டுவதால் குறைந்து வரும் நீர்த்தேக்கப்பரப்பளவு

கண்மாய்க்குள் கழிவுகள் கொட்டுவதால் குறைந்து வரும் நீர்த்தேக்கப்பரப்பளவு

கூடலூர் : ஒட்டான்குளம் கண்மாய்க்குள் மண் மற்றும் கழிவுகள் கொட்டுவதால், நீர்த்தேக்கப் பரப்பளவு குறைந்து வருகிறது. கூடலூர் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் விவசாயம் நடக்கிறது. இக்கண்மாய்க்கு நீர்வரத்து உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சி அருகே மண்சரிவு ஏற்பட்டதால், கண்மாய்க்கு நீர்வரத்தின்றி முதல்போக நெல் சாகுபடி துவங்கவில்லை. இந்நிலையில், கண்மாயின் நீர்த்தேக்கப்பகுதியில் மண் மற்றும் கழிவுகளை இரவு நேரங்களில் வந்து கொட்டி வருகின்றனர். இதனால் கண்மாய்க்குள் குப்பை மேடுகளும், மண் மேடுகளும் அதிகமாகி நீர்த்தேக்கப் பரப்பளவு குறைந்து வருகிறது. கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதால் நீர் இருப்பு குறைந்து விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில், மண் மற்றும் கழிவுகளையும் கண்மாய்க்குள் கொட்டுவதால் இக்கண்மாயை நம்பியுள்ள விவசாயம் பாதிக்க உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ