உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓணம் வரவேற்பு விழா

ஓணம் வரவேற்பு விழா

மூணாறு : தேவிகுளம் சப் கலெக்டர் அலுவலகத்தில் ஓணப்பண்டிகையை வரவேற்கும் விதத்தில் விழா கொண்டாடப்பட்டது. கேரளாவில் ஓணப்பண்டிகை செப்., 9ல் கொண்டாடப்படுகிறது.அதை வரவேற்கும் விதத்தில் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் கேரள பாரம்பரிய உடை அணிந்து, பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவிகுளம் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. வருவாய், வனத்துறை அதிகாரிகள், மூணாறு டி.எஸ்.பி., சாஜி, அட்வஞ்சர் அகாடமியைச் சேர்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் 'ஓண சத்யா' ஓண விருந்து அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ