உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ஆதார் மையம் அக்.,6ல் செயல்படும்

தேனியில் ஆதார் மையம் அக்.,6ல் செயல்படும்

தேனி : தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் அக்.,6ல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் மாநில அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையம் செயல்படுகிறது. இங்கு ஆதார் புதுப்பித்தல், புதிதாக பதிவு செய்தல், பெயர், முகவரி மாற்றம், புகைப்படம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஞாயிறும் ஒரு ஆதார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற அக்.,6ல் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ