உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பத்தில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பத்தில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம், : கம்பம் மெயின் ரோட்டில் நாளை (பிப்.9) காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திண்டுக்கல் முதல் குமுளி வரை ரோட்டை கையகப்படுத்தி இருவழிச் சாலையாக மாற்றி உள்ளது. இதில் தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் ரோடுகளை அமைத்துள்ளது. இருந்த போதும் திண்டுக்கல் முதல் குமுளி வரை பைபாஸ் துவங்கும் இடத்தில் இருந்து முடியும் வரை உள்ள நெடுஞ்சாலை பராமரிப்பை மீண்டும் தமிழக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. நெடுஞ்சாலைத் துறை வழக்கமாக ஆக்கிரமிப்புகள் அகற்றிய போதும், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகிறது. கம்பத்தில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்