உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசில் சீர்மரபினர் புகார்

போலீசில் சீர்மரபினர் புகார்

கூடலுார் : புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மகன் சியாமை கைது செய்யக்கோரி சீர் மரபினர் நலச் சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமையில் கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணியிடம் புகார் மனு வழங்கினர். அந்தமனுவில்: புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ள கிருஷ்ணசாமியின் மகன் சியாம், சமீபத்தில் திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படும் வகையில் 68 பழங்குடி சமூகங்கள் மீது அவதூறாக பேசியதற்கு அவரை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சீர் மரபினர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை