மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
04-Jul-2025
சின்னமனூர்: சின்னமனூர் தெய் வீகப் பேரவை சார்பில் 24 ம் ஆண்டு நால்வர் விழா,பன்னிரு திருமுறைப் பெருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆண்டுதோறும் சைவ சமய குரவர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் திருஅருட் செல்வர்களாகிய 63 நாயன்மார்களையும் வணங்கி வழிபடும் நால்வர் விழா, பன்னிரு திருமுறைப் பெருவிழா கொண்டாடப்பட்டது. முதல் நாளில் நால்வருக்கும் அபிஷேக ஆராதனைகள், சுவாமி புறப்பாடும் நடந்தது. முன்னதாக சிவகாமியம்மன் கோயிலில் வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிகளை அறங்காவலர் குழு தலைவர் குமரேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தேனி சித்பவானந்த ஆசிரமம் சுவாமி பூர்ணானந்தா சுவாமிகள் தலைமையில், 'திருவாசக ஞான மழை' என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருப்பெருந்துறை நிறுவன தலைவர் சிவக்குமார், 'வண் தொண்டர் சிறப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் முத்துக் குமார் சொற்பொழிவாற்றினர். இணை செயலாளர் கனகசுந்தரர் நன்றி கூறினார். மாலையில் நால்வர் திருமேனி வீதி உலா நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு தெய்வீக பேரவை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் குருசாமி வரவேற்றார். ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நியமானந்தா மகராஜ், கவிஞர் பாரதன், புலவர் ராஜரத்தினம் பேசினர். மதுரை சங்கர மடம் சங்கேத்திர சுவாமிகள், சிவபுரம் சைவ சமய பேரவை தலைவர் சிவசுப்ரமணிய தம்பிரான், நாராயண குரு ஆஸ்ரமம் சுவாமிஜி மற்றும் பலர் பங்கேற்றனர். இரண்டாம் நாள் அமர்வில் சுசீந்திரம் ஆடலரசு, பேராசிரியர் ராதா, தலைமையாசிரியை தமிழ் செல்வி, சிறுமலை தத்துவ ஞான ஆசிரமம் சுவாமி ஞானசிவாநந்தா பேசினர். அன்னதானத்தை பாண்டி முனீஸ்வரர், நகராட்சி தலைவர் அய்யம்மாள் துவக்கி வைத்தார்கள்.
04-Jul-2025