மேலும் செய்திகள்
அனைவருக்கும் போனஸ்: பணியாளர் சங்கம் கோரிக்கை
02-Jan-2025
தேனி:''ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் அனுப்பாமல் பணியாளர்களை அரசு குற்றவாளிகளாக மாற்றுகிறது,'' என, தேனியில் அரசு நியாவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் குற்றம் சாட்டினார்.தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி சேலைகள் சரியான அளவில் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுவதில்லை. இலவச வேட்டி, சேலை 1.80 கோடி கார்டுதாரர்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்தனர்.ஆனால் முழுமையாக வழங்காமல் அனைவருக்கும் வழங்கியதாக பதிவு செய்கின்றனர். இதில் பாதிக்கப்படுவது ரேஷன் கடை பணியாளர்கள் தான். மக்கள் விருப்பம் அறிந்து பொருட்கள் வழங்க வேண்டும். சிலர் ரேஷனில் வாங்கிய பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதற்கு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரிசி உள்ளிட்ட பொருட்கள் சரியான எடையில் கடைகளுக்கு அனுப்பாமல் அரசு பணியாளர்களை குற்றவாளிகளாக மாற்றுகிறது.ரேஷன் கடைகளில் முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஆனால் நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் ஆய்வு செய்வதில்லை. பொருட்களை பொட்டலமாக வழங்க கோரி 18 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.நுகர்பொருள் வாணிப கழக கடைகளுக்கு சேதார கழிவு வழங்கப்படுகிறது. கூட்டுறவு கடைகளுக்கு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் ரேஷனில் பொருட்கள் கீழே சிந்தி வீணானதாக மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி கணக்கு எழுதி உள்ளதாக அகில இந்திய கணக்கு தணிக்கைத்துறையினர் தெரிவித்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.திருச்சியில் கூட்டுறவுத்துறையில் பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது குடும்பத்தினர் மீது கஞ்சா வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்து கேட்ட சங்கத்தினர் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும். தேனியில் பணியாளர்கள் குறிப்பிட்ட சங்கத்தில் சேர அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.சங்கத்தினை பொறுத்து பணியாளர்களை பாகுபாடாக நடத்துகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக பிப்.,7 அடுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.
02-Jan-2025