மேலும் செய்திகள்
பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு
24-Sep-2025
கம்பம்: வடகிழக்கு பருவமழை உரிய காலத்தில் பெய்யாமல் தாமதமாக பெய்வதால் ஆடிப் பட்டம் தவறியது. இதனால் மானாவாரி நிலங்களின் மகசூல் பாதிப்பு ஏற்படும் அவலம் எழுந்துள்ளது. மாவட்டத்தில் பயிர் சாகுபட ஆற்று பாசனம், கிணற்று பாசனம், கண்மாய் பாசனம் என பல வழிகளில் நடைபெறுகிறது. இதில் எந்த வகையிலும் சேராமல் வானம் பார்த்த பூமியாய் இருப்பது மானாவாரி நிலங்களாகும். மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, எள்ளு, மொச்சை , உளுந்து உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடியாகிறது. இப் பயிர்கள் கணிசமாக உணவு உற்பத்தியினை மானாவாரி நிலங்கள் பகர்ந்து கொள்கின்றன. மாவட்டத்தில் லோயர் கேம்பில் ஆரம்பித்து பெரியகுளம் வரை மானாவாரி நிலங்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆடிமாதம் விதைப்பார்கள். அக்டோபரில் மழை முழு வீச்சில் பெய்து நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 10 க்கு பின் தான் துவங்கியுள்ளது. குறைந்தது 20 நாட்கள் தாமதமாக மழை துவங்கியதால் ஆடிப் பட்டம் தவறியுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தற்போது விதைத்து வருகின்றனர். ஆனால் மகசூல் பாதிப்பு இருக்கும் என்கின்றனர். இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் பாண்டியன் ராணா கூறுகையில், வடகிழக்கு பருவ மழை 20 நாட்கள் தாமதமாக துவங்கி உள்ளது. உழவு செய்து விதைக்க இன்னமும் 10 நாட்கள் தேவைப்படும். உரிய மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. பலர் ஏற்கனவே விதைப்பு செய்து, மழை பெய்யாததால் தற்போது மீண்டும் மறு விதைப்பு செய்துள்ளனர். பருவ மழை தவறியதால், ஆடிப் பட்டமும் தவறிவிட்டது. இந்த சீசனில் மானாவாரி நிலங்களில் மகசூல் பாதிப்பு ஏற்படும் என்றனர்.
24-Sep-2025