உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி

தேனி: தேனி அருகே வடபுதுப்பட்டியில் அன்பு ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதித்த ஆதரவற்ற அக்கம்மாள் 64 இருந்தார். 2025 ஜன.1ல் அன்பு இல்லத்தில் அங்கு கிடந்த இலை, தழைகளை குவித்து தீயிட்டு குளிர்காய்ந்து கொண்டிருந்தார். உடையில் திடீரென தீ பற்றி, உடலில் காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி யில் சேர்க்கப்பட்டு ஜன.6ல் இறந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !