உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிஜிட்டல் கிராப் சர்வே பணி நவ.22க்குள் முடிக்க திட்டம்

டிஜிட்டல் கிராப் சர்வே பணி நவ.22க்குள் முடிக்க திட்டம்

தேனி : மாவட்டத்தில் மாணவர்களை வைத்து நடந்து வரும் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை நவ.22க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.தோட்டக்கலை, வேளாண் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு டிஜிட்டல் சர்வே பணிகள் நடந்து வருகிறது. டிஜிட்டல் சர்வே பணிகளில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியை சேர்ந்த 327 மாணவர்கள், தனியார் வேளாண் கல்லுாரியை சேர்ந்த 199 மாணவர்கள் என 526 மாணவர்கள், வேளாண்,தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மூலம் கிராப் சர்வே பணி நவ.,9ல் துவங்கியது.வேளாண் துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 109 வருவாய் கிராமங்களிலும் டிஜிட்டல் சர்வே பணிகளை நவ.,22க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சர்வே பணியில் பலஆண்டு பயிர்கள், சில மாதம் சாகுபடி செய்ய கூடிய பயிர்கள் என பிரித்து செயலியில் பதிவேற்றப்படுகிறது. பேரிடர் காலங்களில் பாதிப்புகளை விரைவாக கணக்கிட இயலும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை