உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருட்டு குற்றங்களை தடுக்க இயலாமல் போலீசார் திணறல்! பி.சி.,பட்டி ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும்

திருட்டு குற்றங்களை தடுக்க இயலாமல் போலீசார் திணறல்! பி.சி.,பட்டி ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும்

பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் எல்லைகளாக பழனிசெட்டிபட்டி, லட்சுமி நகர், முல்லை நகர், அரண்மனைப்புதுார், கோட்டைப்பட்டி, அய்யனார்புரம் வரை வடகிழக்கு எல்லையாகவும், சத்திரபட்டி, வீருசின்னம்மாள்புரம் முதல் சங்ககோணாம்பட்டி, கோபாலபுரம் வரை தென்கிழக்கு எல்லையாகும். மேற்கு பழனிசெட்டிபட்டி, தெற்கு ஜெகனாதபுரம், அரசு நகர், முத்துநகர், வடக்கு ஜெகனாதபுரம், வாழையாத்துபட்டி ஆதிபட்டி, அகல ரயில்பாதை வழித்தடம், மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டி, பூதிப்புரம் பேரூராட்சி, மாரியம்மன் கோயில் பட்டி, திருச்செந்துார், போடி ரோட்டில் உள்ள தீர்த்தத் தொட்டி வரை உள்ள பகுதிகள், தோப்புப்பட்டி, இந்திராகாலனி, சடையால்பட்டி, போடி ஒன்றியத்தில் உள்ள டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், சரளிக்களம், சாலிமரத்துப்பட்டி என மேற்கு எல்லை என 53 கி.மீ., துார கொண்ட பகுதிகளாக உள்ளன.

குற்றங்கள் அதிகரிப்பு

இக் கிராமங்களில் பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர். பரந்து விரிந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல், திருட்டு, குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது. ஒரு பகுதியில் ரோந்து சென்று திரும்பி வருவதறகே ஒரு இரவு ஆகிவிடும். இதனால் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு குற்றச்சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 3 விபத்துகளும், குற்றச்சம்பவங்களில் 5 எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் வீரபாண்டி ஸ்டேஷனையும் கவனிக்கிறார். நேரடி எஸ்.ஐ., ஒருவரும், மிகக்குறைந்த எண்ணிக்கையில் போலீசார் உள்ளனர். இதனால் போலீசார் விடுமுறை கூட எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இப் பகுதியில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால் கட்டுப்படுத்த வழி தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர். மறுபுறம் கஞ்சா, மதுபாட்டில் விற்பனை, லாட்டரி விற்பனை என குற்றங்கள் பெருகி கொண்டே உள்ளது. இதனால் பழனிசெட்டிபட்டி பகுதி எப்போது பரப்பாகவே உள்ளது.எனவே பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனை 2 ஆக பிரிப்பது மிக அவசியம். புதிய ஸ்டேஷனாக அரண்மனைப்புதுாரில் துவக்க வேண்டும். அதே நேரத்தில் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவலத்துறையும் அரசுக்கு பரிந்துரை செய்தும் அரசு இதற்கான அறிவிப்பு இல்லை. இதனால் போலீசார் மிகுந்த பணிச்சுமையில் சிரமம் அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி