உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கழிவுநீர் தேக்கத்தால் வீடுகளுக்குள் வரும் வால்புழுக்கள் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 6வது வார்டு மக்கள் அவதி

கழிவுநீர் தேக்கத்தால் வீடுகளுக்குள் வரும் வால்புழுக்கள் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 6வது வார்டு மக்கள் அவதி

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 6வது வார்டில் பாதாள சாக்கடை பணி முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ரோடு, சாக்கடை வசதி இன்றி கழிவுநீர் தேங்கிய வால் புழுக்கள் வீடுகளுக்குள் உலா வரும் அவல நிலையால் பொது மக்கள் சிரமம் அடைகின்றனர். மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 6 வது வார்டில் பட்டாளம்மன் கோயில் மேற்கு, கிழக்கு, வடக்கு தெருக்களின் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப் பகுதியில் சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதில் பாலிதீன், குப்பை கழிவு தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் சாக்கடை, ரோடு வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அப் பகுதி மக்கள் கூறியதாவது :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை