உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சியில் சர்வே பணி பாதிப்பு சர்வேயர் பற்றாக்குறையால் அவதி

தேனி நகராட்சியில் சர்வே பணி பாதிப்பு சர்வேயர் பற்றாக்குறையால் அவதி

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் சர்வேயர் பற்றாக்குறையால் சர்வே பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் சர்வேயர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதி முழுவதும் அல்லிநகரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்டுள்ளது. நகராட்சியில் ஒரு சர்வேயர் மட்டும் உள்ளார். ஆனால், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துகள் பெயர் மாற்றம், விற்பனை, பாகபிரிவினை உள்ளிட்டவை தொடர்பாக பலர் இடங்களை நில அளவீடு செய்து தர விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இங்குள்ள ஒரே ஒரு சர்வேயரும் அலுவல் பணிகள், கலெக்டர் அலுவலக கூட்டங்கள், நீதிமன்ற வழக்குகளுக்கு நேரில் செல்லும் நிலை உள்ளது. இதனால் வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டுமே சர்வே பணிகள் நடக்கிறது. இதனால் பலரும் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலை தொடர்கிறது.பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சியில் சர்வே பணிகளில் ஈடுபட கூடுதலாக அலுவலரை நியமிக்க வேண்டும். மேலும், இடங்களை சர்வே செய்ய விண்ணப்பித்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு விரைந்து முடிக்க வேண்டும். திருமணம், வெளியூர் குடிமாற்றம் உள்ளிட்டவற்றிற்காக சொத்துக்களை விற்பனை செய்பவர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ