உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துார்வாராத அருப்புகத்தான் ஓடை மழை நீர் செல்வதில் சிரமம்

துார்வாராத அருப்புகத்தான் ஓடை மழை நீர் செல்வதில் சிரமம்

போடி: போடி அருகே காமராஜபுரத்தில் உள்ள அருப்புகத்தான் ஓடை தூர்வாராததால் செடிகள் வளர்ந்து, குப்பை தேங்கி மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. போடி குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்யும் மழை நீரானது அணைப் பிள்ளையார் அணை வழியாக மீனாட்சியம்மன் கண்மாயில் தேக்கமாகிறது. இங்கு நிரம்பும் நீரானது விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதியை கடந்து காமராஜபுரம் அருப்புகத்தான் நீர்வரத்து ஓடை பகுதிக்கு வந்தடையும். தற்போது கொட்டகுடி ஆற்றில் துவங்கி காமராஜபுரம் வரை உள்ள நீர்வரத்து ஓடையின் இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமித்து மரங்கள் வளர்த்து உள்ளனர். காமராஜபுரத்தில் உள்ள அருப்புகத்தான் ஓடை தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. மழைநீர் சீராக செல்ல முடியாமல் ஓடையில் செடிகள் வளர்ந்து காணப்படுவதோடு, குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு வகையில் சுகாதாரக்கேடு ஏற்படு கிறது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் அருப்புக்கத்தான் நீர்வரத்து ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை