உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலியை நேரில் பார்த்த தொழிலாளர்கள் அச்சம்

புலியை நேரில் பார்த்த தொழிலாளர்கள் அச்சம்

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கல்லார் எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம் போல் பணிக்குச் சென்றனர். அப்போது காலை 8:15 மணிக்கு தேயிலை தோட்ட எண் 8ல் புலி நடமாடியதை தொழிலாளர்கள் நேரில் பார்த்தனர். ஏற்கனவே அப்பகுதியில் நூற்றுக் கணக்கில் காட்டுமாடுகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனிடையே புலியை தொழிலாளர்கள் நேரில் பார்த்ததால் அச்சம் அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ