7 பவுன் நகை திருட்டு
போடி : போடி அம்மாகுளம் அஜ்மல்கான் நகரை சேர்ந்தவர் ராகமதில்லா 58. இவர் வீட்டின் பீரோவில் 3 பவுன் ஆரம், 4 பவுன் நெக்லஸ் வைத்து இருந்தார். கடந்த வாரம் பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவில் இருந்த ரூ.ஒரு லட்சத்தி 75 ஆயிரம் மதிப்பு உள்ள 7 பவுன் நகை காணாமல் போனது தெரிந்தது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. ராகமதில்லா புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.