உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மிஷின்கள் திருட்டு

மிஷின்கள் திருட்டு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் 44, பால்பண்ணை நடத்தி வந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் 44. அசோக்குமாரிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தார். இதற்காக மனோஜ்குமார், அசோக்குமாரிடம் பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என அசோக்குமார் கூறிவிட்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் பால்சேகரிக்கும் மிஷின் உட்பட ரூ.10.75 லட்சம் மதிப்பிலான 4 பொருட்களை மனோஜ்குமார் திருடி சென்றார். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ