உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ‛சி டூ சி திட்டசாலை அளவீடு பணி விரைவில் துவக்கம் நகராட்சி அதிகாரிகள் தகவல்

தேனியில் ‛சி டூ சி திட்டசாலை அளவீடு பணி விரைவில் துவக்கம் நகராட்சி அதிகாரிகள் தகவல்

தேனி : தேனி நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 'சி டூ சி' திட்டசாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி நகர்பகுதியில் பல்வேறு இடங்களில் திட்டசாலைகள் அமைக்க 25 ஆண்டுகளுக்கு முன்திட்டமிடப்பட்டது. ஆனால் பல திட்ட சாலைகள் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது நகரமயமாதல், அதிக போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காண திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேனி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து கம்பம் ரோடு பள்ளிவாசல் தெரு வரையிலான சி டூ சி' திட்டசாலை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சில நில உரிமையாளர் நிலம் வழங்க முன்வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி சார்பில் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்துள்ளது. நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ' பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரோடு அமைக்க சிலர் இடம் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த ரோடு சுமார் 400 மீ., நீளம், 18 மீ., அகலம் கொண்டதாகும். ரோடு அமையும் பகுதியில் உள்ள மற்ற நில உரிமையாளர்களிடமும் பேசி வருகிறோம். சிலர் வழங்கி உள்ள இடத்தில் அளவீடு பணிகள் துவங்க உள்ளோம். பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு அருகே துவங்கி, கம்பம் ரோட்டில் இந்த திட்டசாலை இணையும். இந்த ரோடு பயன்பாட்டிற்கு வந்தால் நகர்பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி