தேனி கோ ஆப்டெக்சில் நவ.31 வரை தள்ளுபடியுடன் விற்பனை நீட்டிப்பு
தேனி, நவ. 2- -தேனியில் தீபாவளி முடிந்த நிலையிலும் கோஆப் டெக்சில் நவ.31 வரை விற்பனை நீட்டித்து தள்ளுபடி சலுகை தொடர்கிறது.தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் கோஆப் டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி முடிந்த நிலையிலும், விற்பனை நவ.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு சேலத்தில் நெசவு செய்த பல வண்ண செயற்கை பட்டுச் சேலைகள் ரூ.1300, ரூ.1450 மதிப்பில் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை அனைத்து பெண்கள் அணியும் வகையில் 'பிளவுஸ்' மெட்டீரியலுடன் 6.20 மீட்டர் அளவில் உள்ளது. வண்ணங்களில் குர்தீஸ் டாப்ஸ்
கல்லுாரி செல்வோர், பணிக்கு செல்லும் பெண்களுக்கான காட்டன் குர்தீஸ் டாப்ஸ் ரூ.680க்கு 20 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதுதவிர பருத்தி, பட்டும் கலந்து தயாரித்த சில்க் காட்டன் சேலைகள் 1000 புட்டா அதாவது முறையே ஆயிரம் அன்னப்பறவை, யானை, சிங்கம், பூக்கள் உள்ளிட்ட டிசைன்கள் செய்து தயாரிக்கப்பட்டவை ரூ. 8 ஆயிரத்திற்கு 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.ஷோரூம் மேலாளர் சந்திரசேகரன் கூறுகையில், 'தேனி கோஆப் டெக்சில் தீபாவளி இலக்கு ரூ.70 லட்சம் இலக்கு. இதில் தீபாவளி வரை ரூ.46 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. நவ.31 வரையிலான காலக்கெடுவில் இலக்கை எட்டுவோம். விற்பனையில் 20 முதல் 30 சதவீத தள்ளுபடியுடன் வழங்குகிறோம். குர்தீஸ் டாப்ஸ் சுத்தமான பருத்தியால் செய்யப்பட்டது என்பதால் கல்லுாரி பெண்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.'என்றார்.