உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி கலெக்டர் ஆபீசில் மஞ்சப்பை இயந்திரம் முடக்கம்

தேனி கலெக்டர் ஆபீசில் மஞ்சப்பை இயந்திரம் முடக்கம்

தேனி; தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்ட மஞ்சப்பை இயந்திரம் மின் இணைப்பு இல்லாததால் பயன்பாடின்றி முடங்கியது.மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் ரூ.10க்கு மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்கு குழு கடைகள் இயங்கும் பகுதியில் ஜன.,25ல் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இயந்திரத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் ஒரே வாரத்தில் பயன்பாடின்றி காட்சி பொருளானது. இதே போல் சில மாதங்களுக்கு முன் பழைய பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்ட இயந்திரமும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை