உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தேனி த.ம.மு.க. மாவட்டச் செயலாளர் கைது 

வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தேனி த.ம.மு.க. மாவட்டச் செயலாளர் கைது 

தேனி'தேனி பழனிசெட்டிபட்டி வியாபாரி வீட்டில் நுழைந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் தில்பிரசாத்தை 31, போலீசார் கைது செய்தனர்.பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெரு முத்துக்கிருஷ்ணன் 45, வியாபாரி. இவருக்கும் திருநெல்வேலி ஜோதிப்புரத்தில் வசிக்கும் செல்வராஜூக்கும் வியாபார பழக்கம் ஏற்பட்டது. முத்துக்கிருஷ்ணன், செல்வராஜிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளார்.2024 செப்.,30ல் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது தில் பிரசாத், அவருடன் வந்த 9 பேர் வீட்டிற்குள் நுழைந்து செல்வராஜூக்கு பணம் கொடுப்பது குறித்து பேசி அங்கிருந்த கார், டூவீலர் சாவிகளை எடுத்தனர். இதற்கு முத்துக்கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவிக்க, அவரை திட்டி, உடன் வந்தவர்கள் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின் கார், டூவீலரை எடுத்து சென்றனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணையில் தில்பிரசாத் காரை திருப்பி கொடுத்தார். டூவீலரை வழங்க வில்லை. தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் முத்துக்கிருஷ்ணன் புகார் அளித்தார். அவரது உத்தரவில் பழனிசெட்டிபட்டி போலீசார் தில்பிரசாத் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து, நேற்று தில்பிரசாத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை