உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி சட்ட கல்லுாரிக்கு கம்பத்தில் இருந்து பஸ் தேவை

தேனி சட்ட கல்லுாரிக்கு கம்பத்தில் இருந்து பஸ் தேவை

கம்பம்: கம்பம் பகுதியில் இருந்து தேனி சட்டக் கல்லூரிக்கு காலை மாலை சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி சட்டக் கல்லூரி வீரபாண்டி அருகில் செயல்பட்டு வருகிறது. சட்டக்கல்லூரி அருகில் கலை அறிவியல் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ., போன்ற அரசு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இக்கல்லூரிகளில் படிக்க கூடலூர், கம்பம், புதுப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், ஓடைப்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தினமும் காலையில் வீரபாண்டிக்கு செல்கின்றனர். வீரபாண்டியில் காத்திருந்து, தேனியில் இருந்து வரும் பஸ்சில் சட்டக் கல்லூரிக்கு செல்ல வேண்டும். காலை மட்டுமின்றி மாலையிலும் கல்லூரி முடிந்த பின் ஊர்களுக்கு திரும்ப பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், கம்பம் பகுதி மாணவ மாணவிகள் காலையில் பஸ் ஏறிச் சென்று வீரபாண்டியில் காத்திருக்க வேண்டும். தேனியில் இருந்து பஸ் வரவில்லை என்றால் மிகவும் சிரமமாகி விடுகிறது. எனவே கம்பத்தில் இருந்து சட்டக் கல்லூரிக்கென தனியாக காலை,மாலையில் தனியாக பஸ் விட போக்குவரத்து கழகம் முன் வர வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை