உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தேனி எம்.பி.,

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தேனி எம்.பி.,

தேனி: 'புதிய குற்றவியல் சட்டம், விமான சட்டம் உள்ளிட்டவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியது போல் மத்தியஅரசு, ரயில்வே திருத்தச் சட்டத்தை அம் மொழியில் மாற்றமால் இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.', என, லோக்சபாவில் ரயில்வே திருத்த மசோதாவின் மீது நடந்த விவாதத்தில்தேனி தி.மு.க., எம்.பி., தங்கதமிழ்செல்வன் பேசினார்.லோக்சபாவில் அவர் பேசியதாவது: ரயில்வேத்துறையில் பணிபுரியும் பெண் பைலட்களுக்கு மகப்பேறுவிடுமுறை காலத்தை ஒராண்டாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் மண்டல ரயில்வே அதிகாரிகள்,தென்மண்டல ரயில்வே பொது மேலாளர், டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் தமிழ், மலையாளம்தெரிந்தவர்களாக நியமிக்கப்பட வேண்டும். ரயில்களுக்கு துாய தமிழ் பெயர்களை வேண்டும். கன்னியாகுமுரி முதல் காஷ்மீர் வரை கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர்.இவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல் - சபரிமலை அகல ரயில்பாதை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனால் சபரிமலைக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேல் பக்தர்கள் வந்து செல்வர். இதனால் வருவாய் அதிகரிக்கும். 35 கி.மீ., வேகத்தில் செல்லும் சரக்கு ரயில்களின் வேகத்தை 70 கி.மீ., வேகத்தில் செல்லும்படி அதிகரிக்க வேண்டும். இதனால் சரக்குகள் குறைந்த நேரத்தில்வணிகர்கள், வியாபாரிகளுக்கு கிடைக்கும். பண்டமாற்று முறையில் சீரான வளர்ச்சி இருக்கும். லாபமும் அதிகரிக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை