மேலும் செய்திகள்
மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்
24-Jun-2025
தேனி; தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ஏகராஜிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை 9 மணி நேரம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். ஏற்கனவே அவர் விடுமுறையில் உள்ளதால், கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் சேகர் தேனி நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஏகராஜ். தேனி நகராட்சி கமிஷனராக 10 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.2019 முதல் 2024 வரை சென்னை தலைமை செயலகம், நீலகிரி மாவட்டம், ஊட்டி உள்ளிட்ட சில நகராட்சிகளில்பணிபுரிந்துள்ளார்.வருமானத்திற்கு அதிகமாக இவர் ரூ.2.50 கோடி மதிப்பில்சொத்து சேர்த்துள்ளதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. ஜூலை 1ல் தேனி நகராட்சி குடியிருப்பில் உள்ளகமிஷனர் வீட்டில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் காலை முதல் இரவு வரை 13 மணி நேரம் சோதனை நடத்தி 6 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.அப்போது ஏகராஜ் குடும்ப நிகழ்ச்சிக்காகவிடுமுறையில் சென்றிருந்தார். அவரை விசாரணைக்கு வருமாறு தகவல் தெரிவித்திருந்தனர். அவர் நேற்று தேனி வந்தார். அவரிடம் போலீசார் காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுச் சென்றனர். போலீசார் கூறுகையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்திற்கும் விளக்கம் கேட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் உயரதிகாரிகள் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' எனறனர்.ஏகராஜ் விடுப்பில் உள்ளதால் கொடைக்கானல்நகராட்சி கமிஷனர் சேகருக்கு தேனி நகராட்சி கமிஷனர் பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
24-Jun-2025