உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தெரு நாய்கள் தொல்லை வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்

தேனியில் தெரு நாய்கள் தொல்லை வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில், தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. நகராட்சி அனைத்து பகுதிகளிலும், கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றில் பல நோய் தாக்கிய நிலையில், உடல் முழுவதும் புண்பட்ட நிலையில், புழு பிடித்த நிலையில் காணப்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு இவை அச்சத்தை ஏற்படுத்துகின்றன.தெருக்களில் விøளாயாடும், சிறுவர்களை இவை கடித்து விடுகின்றன. வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்கின்றன. புண்பட்ட நாய்கள் குழந்தைகள் அருகே செல்லும் போது கடிக் காமலே நோய் பரவும் அபாயம் உள்ளது. வெறிநாய்,சொறிநாய், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், என நகராட்சி கூட்டத்தில் பல முறை கவுன்சிலர்கள், வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. நாய்களை கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறும் நகராட்சி நிர்வாகம், வெறும் கணக்குகளை மட்டுமே காட்டுகிறது. நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) கணேசன் கூறியதாவது: தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்து வருகிறோம். நோய் முற்றிய, புண்பட்ட நாய்களை, கால்நடைத்துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ