மேலும் செய்திகள்
மாநில மூத்தோர் தடகளம்; 800 பேர் பங்கேற்பு
29-Dec-2024
தேனி; மாநில அளவில் நடந்த தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு மாணவர்கள், ஒரு மாணவி என மூவர் ஜார்கண்ட்டில் நடக்க உள்ள தேசிய தடகளப்போட்டியில் பங்கேற்கின்றனர்.ஈரோட்டில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தது. போட்டிகளில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். கம்பம் முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் தாரனேஷ் மாணவர்கள் பிரிவில் தட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்றார். கூடலுார் என்.எஸ்.கே.பி., பள்ளி மாணவர் இன்பத்தமிழன் 200மீ., 400மீ., 600மீ., போட்டிகளில் வெற்றி பெற்றார். இவர்கள் மூவரும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜன.,14-17 வரை நடக்கும் தேசிய தடகளப்போட்டியில் பங்கேற்கின்றனர். இம் மாணவர்களுக்கு இன்று முதல் ஜன.,9வரை திருவண்ணாமலையில் தடகள பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. பயிற்சி முடித்ததும் ராஞ்சி செல்கின்றனர்.
29-Dec-2024