தேனி பாதாள சாக்கடை பணி 6.5 கி.மீ., துாரத்திற்கு நிறைவு
தேனி : தேனி நகர்பகுதியில் இரு மாதங்களில் 6.5 கி.மீ., துாரத்திற்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி நகர்பகுதி, பழனிசெட்டி பேரூராட்சி பகுதிகளை இணைத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது ரூ.67.76 கோடி மதிப்பில் சுமார் 52 கி.மீ., துாரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தும் பணி இரு மாதங்களுக்கு முன் துவங்கியது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், புதிய பாதாள சாக்கடை திட்டத்தில் 15 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் 6.5 கி.மீ., துாரத்திற்கு பைப்கள் பதிக்கப்பட்டுள்ளன. 125 இடங்களில் மூடியுடன் கூடிய பாதாள சாக்கடை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026 ஆக.,ல் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.