உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகள் 3 பேர் மாயம்

மாணவிகள் 3 பேர் மாயம்

தேனி: மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவிகள் 3 பேர் மாயமாகினர். தேனி சடையால்கோவில் 2வது தெற்கு தெரு ராஜேஸ்வரி. இவரது மகள் லோகவர்ஷினி 19. இவர் பெரியகுளம் அருகே உள்ள கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார் இந்நிலையில் டிச.,4 கல்லுாரி சென்றவர் வீடு திரும்ப வில்லை. ராஜேஸ்வரி புகாரில் தேனி போலீசார் தேடி வருகின்றனர்.கூடலுார் சுக்காங்கல்பட்டி ஜெயசந்திரன். இவரது மகள் ஜெயஸ்ரீ 19. இவர் ராயப்பன்பட்டியில் அருகே உள்ள கல்லுாரியில் பி.எட்., முதலாமாண்டு படித்து வந்தார். டிச.,4ல் கல்லுாரி சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் புகாரில் கூடலுார் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடமலைக்குண்டு வடக்கு காலனி தெரு மணிகண்டன். இவரது மகள் ஆனந்தி 17. இவர் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் டிச.,4ல் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை